என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பெரிய வெற்றியை பெற்றுத்தர வேண்டும்-உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேச்சு
    X

    நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பெரிய வெற்றியை பெற்றுத்தர வேண்டும்-உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேச்சு

    • நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பெரிய வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்
    • புதுக்கோட்டை மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    விராலிமலை,

    தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பெறுப்பேற்ற பின்னர் பல்வேறு கட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க.வில் உறுப்பினர்களின் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேகமான பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் புதுப்பித்தல் மற்றும் சேர்த்தல் பணியின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவூரில் முன்னாள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சேர்க்கை படிவங்களை பெற்று வருகிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் தமிழக முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவரும், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான பி.கே.வைரமுத்துவும் இணைந்து இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவூரில் உள்ள பெரியநாயகி மக்கள் மாதா மன்றத்தில் இந்த புதுப்பித்தல் மற்றும் உறுப்பினர் சேர்த்தல் படிவங்களை பெற்றுக் கொண்டனர்.

    இதைப் பெற்றுக் கொண்ட விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், தன்னலம் பாராது கட்சியின் வளர்ச்சிக்கு இரவு, பகலாக உழைத்த உங்களுக்கு நன்றி என்றும், இதே போல் விறுவிறுப்புடன் செயல்பட்டு வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதற்கு இதே போல் இரவு. பகல் பாராமல் உழைத்திட வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர்கள் முத்தமிழ் செல்வன், சுப்பையா, சாம்பசிவம், பழனியாண்டி, நாகராஜ், திருமூர்த்தி, ஏ.வி.ராஜேந்திரன், பேரூராட்சி செயலாளர் மணிகண்டன் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×