என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் த.மு.மு.க. சார்பில் ரமலான் அரிசி வழங்கும் விழா
- ஆலங்குடியில் த.மு.மு.க. சார்பில் ரமலான் அரிசி வழங்கும் விழா நடைபெற்றது
- நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் ச.ச. முகமது சருக் தலைமை வகித்தார்
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் த.மு.மு.க. சார்பில் ரமலான் மாதத்தை முன்னிட்டு 29-ம் ஆண்டு அரிசி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் ச.ச. முகமது சருக் தலைமை வகித்தார் . செயலாளர் அப்துல் லத்தீப், தமுமுக மாவட்ட துணைசெயலாளர் அக்பர் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக நகர தலைவர் சையது முகமது வரவேற்றார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ரமலான் பித்ரா அரிசி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமுமுக உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஜமாத் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். வெற்றிலை ராஜா நன்றி கூறினார்.
Next Story






