என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  புதுக்கோட்டையில் ரூ.7.22 கோடி மதிப்பீட்டில் 5 நெல் கொள்முதல் நிலையங்களை காணொளி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
  X

  புதுக்கோட்டையில் ரூ.7.22 கோடி மதிப்பீட்டில் 5 நெல் கொள்முதல் நிலையங்களை காணொளி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் 3 நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
  • முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் அழியா நிலையில் 37 மெ.டன், துளையனூரில் 8 ஆயிரம் மெ.டன் பாதுகாக்கும் வகையில் மேற்கூரையுடன், கான்கிரீட் தளம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மண்டலத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பொருட்டு கான்கிரீட் தளம், மேற்கூரை கட்ட தமிழக அரசு ரூ.47.11 நிதி ஒதுக்கீடு செய்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 40 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் வகையில் அறந்தாங்கி தாலுகா, அழியா நிலையிலும், துளையனூரில் 12.50 மெ.டன் என மொத்தமாக 52.5 மெ.டன் பாதுகாக்கப்படும் வகையில் 37 மேற்கூரையுடன் கூடிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது.

  முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் அழியா நிலையில் 37 மெ.டன், துளையனூரில் 8 ஆயிரம் மெ.டன் பாதுகாக்கும் வகையில் மேற்கூரையுடன், கான்கிரீட் தளம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேலும் அழியா நிலையில் 3 ஆயிரம் மெ.டன் கொள்ளவு கொண்ட 2 கிடங்குகளையும், துளையனூரில் 4 ஆயிரம் மெ.டன் கொள்ளவு கொண்ட 3 கிடங்குகளையும் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.மேலும் புதுக்கோட்டை மாவட்டம், சிறுமருதூர், பொன்னன்விடுதி, நெற்குப்பை ஆகிய இடங்களில் தலா ரூ.62.50 இலட்சம் வீதம் ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் 3 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

  இதற்காக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற் நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் எம்.சீதாராமன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Next Story
  ×