என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தக திருவிழா
    X

    புத்தக திருவிழா

    • புதுக்கோட்டையில் 6-வது புத்தக திருவிழா
    • 10 நாட்கள் நடைபெறுகிறது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 6-வது புத்தகத் திருவிழா வரும் 28-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகின்றன.மாவட்ட கலெக்டரும், புத்தகத் திருவிழாக்குழுத் தலைவருமான மெர்சி ரம்யா தலைமையில், மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். தொடர்ந்து மாலையில் சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.தினகரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.29-ந் தேதி அன்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனின் சிறப்புரை, மூத்த விஞ்ஞானித.வி.வெங்கடேஸ்வரனின் அறிவியல் உரை, கவிச்சுடர் கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.30-ந் தேதி அன்று செந்தில்கணேஷ், ராஜலட்சுமியின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜூலை 31-ந் தேதி கவிஞர் நந்தலாலா, வழக்குரைஞர் த.ராமலிங்கம் ஆகியோரின் இலக்கியச் சொற்பொழிவுகள் இடம் பெறுகின்றன.

    ஆகஸ்ட் 1-ந் தேதி அன்று எழுத்தாளர் ச.தமிழ்ச்செ ல்வன், பேராசிரியர் ஆத்ரேயா ஆகியோரின் உரைவீச்சு இடம்பெறுகிறது. 2-ந் தேதி எழுத்தாளர் பவா.செல்லதுரை, எழுத்தாளர் நக்கீரன், முன்னாள் துணைவேந்தர் சொ.சுப்பையா ஆகியோர் உரையாற்றுகின்றனர். 3-ந் தேதி அன்று கவிதா ஜவகரின் இலக்கிய உரையும், கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் கவியரங்கமும் நடைபெறுகிறது.4-ந் தேதி அன்று எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில்பட்டிமன்றம் நடைபெறுகிறது. 5-ந் தேதி அன்றுஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரைத் தொகுதி மக்களவை உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் உரையாற்றுகின்றனர் நிறைவு நாளான 6-ந் தேதி அன்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் கவிதா ராமு,நடிகர் தாமு,எழுத்தாளர் விழியன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.இந்த புத்தக திருவிழாவிற்கான அழைப்பிதழை கலெக்டர் வெளியிட்டார். இந்த நிழ்ச்சியில் கவிஞர்கள் தங்கம் மூர்த்தி, ஜூவி, முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா, வீரமுத்து, மணாளன் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×