search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா
    X

    பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

    • பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது
    • திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி பொய்சொல்லா மெய்யர், பத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

    பழமை வாய்ந்த இக்கோயிலில் அண்மையில் நாட்டுக்கோட்டை நகரத்தார் பெருமக்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. காலை 10 மணியளவில் கோவனூர் சுவாமிநாத பண்டிதர் தலைமையில் பண்டிதர்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை கும்பத்தில் ஊற்றி விநாயகர், பொய் சொல்லா மெய்யர், பத்ரகாளியம்ன், மூலிகைமலையான், பிரம்மர் கருப்பர் மற்றும் பொன்னையா சுவாமி உள்ளிட்ட சன்னிதானங்களுக்கு குடமுழுக்கு செய்தனர்.

    விழாவின் போது திருமுறை பாராயணங்கள் ஒதப்பட்டது.விழாவை சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான காவல்துறையினர் செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நகரத்தார்கள், ஊர்ப்பொதுமக்கள் மற்றும் பரம்பரை பூஜகர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து ஐம்பெரும் கடவுளர் திருவீதி உலா நடைபெற்றது.

    Next Story
    ×