என் மலர்
உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கி நகராட்சி பள்ளியில் ஆண்டுவிழா
- அறந்தாங்கி நகராட்சி பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது
- இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், திருக்குறள் ஒப்புவித்தல், பழமொழி, கவிதை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் ரேணுகா ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் ஆனந்த் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், திருக்குறள் ஒப்புவித்தல், பழமொழி, கவிதை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.
இறுதியில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணை தலைவர் முத்து, வட்டாரக் கல்வி அலுவலர் நடராஜன், அன்பழகன், நிஸார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள் விஸ்வமூர்த்தி, மங்கையர்கரசி, அசாருதீன், இடைநிலை ஆசிரியர் நிர்மல்சகில்தா உள்ளிட்ட ஆசிரியர்கள் அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






