என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேளாண்மை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
- கந்தர்வகோட்டையில் வேளாண்மை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது
- விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஆர்வமுடன் கலை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை ஒன்றியம் அண்டனூர் மற்றும் மட்டங்கால் ஊராட்சியில் வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் தரிசில் உளுந்து சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் சிறு தானியங்கள் பயிர் சாகுபடி தொழில்நுட்பம் பற்றி கிராமிய ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் அன்பரசன், மட்டங்கால் ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பிள்ளை, அண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஆர்வமுடன் கலை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
Next Story






