என் மலர்
உள்ளூர் செய்திகள்

குரங்கு அம்மை நோய் தடயங்களுடன் வந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதி
- குரங்கு அம்மை நோய் தடயங்களுடன் வந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
- சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
திருச்சி விமான நிலையத்துக்கு தினமும் 700 பேருக்கு மேல் வருகின்றனர். அதிகளவில் அரபு நாடுகளில் இருந்து திருச்சிக்கு வருவதால் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு, குரங்கு அம்மை நோய்க்கான தடயங்கள் காணப்பட்டது. அவரை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் யாரிடமும் சொல்லாமல் வெளியேறி ஊருக்கு சென்றுவிட்டார். இது குறித்து புதுக்கோட்டை சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சென்று அந்த நபரை அழைத்து வந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரிடமிருந்து ரத்தம், சிறு நீர், தொண்டை மற்றும் தோல் பகுதிகளில் எச்சில் போன்றவற்றை சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப் பிவைக்கப்பட்டுள்ளது. முடிவு வந்த பிறகே எதையும் கூற முடியும் என்றார்.