என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியாக சமையல் செய்ததை கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
- தனியாக சமையல் செய்ததை கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
- சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியரின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள செங்கமாரி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மகாலெட்சுமி (வயது 23). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே கடந்த 25-ந்தேதி ராஜாவின் சகோதரருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து மகாலெட்சுமி தனியாக சமைக்கத் தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக மாமியார் காந்திமதி, கணவர் ராஜா உள்ளிட்டோர் மகாலெட்சுமியை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான மகாலெட்சுமி வயலுக்கு பயன்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதில் மயக்கமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் மகாலெட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து மகாலெட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியரின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்பத்தகராறில் 23 வயது இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






