search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    48-வது கம்பன் பெருவிழா
    X

    48-வது கம்பன் பெருவிழா

    • புதுக்கோட்டையில் 48-வது கம்பன் பெருவிழாவின் 3ம்நாள் விழா நடைபெற்றது.
    • நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு பேசினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை கம்பன் கழக சார்பில் நடைபெற்று வரும் 48-வது கம்பன் பெருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.விழாக் குழு உறுப்பினர் எம்.எஸ்.ரவி வரவேற்புரையாற்றினார். முதல் அமர்வாக சென்னை சிவக்குமார் அரங்க நடுவராக, தம்பி எத்தனை தம்பி என்ற தலைப்பில் உயிர் காத்த தம்பி என்ற தலைப்பில் சென்னை சிவ சதீஷ், உயிர் நீத்த தம்பி என்ற தலைப்பில் முசிறி ஸ்ரீநிதி, உயிர் எடுத்த தம்பி என்ற தலைப்பில் திருச்சி வீர பாலாஜி, உயிர் கொடுத்த தம்பி என்ற தலைப்பில் காரைக்குடி மீனாட்சி உரையாற்றினார்கள்.எம்.ஆர்.எம். கல்வி நிறுவனங்கள் நிறுவனர் எம்.ஆர் மாணிக்கம் தலைமை வகித்தார். சண்முக பழனியப்பன், ராமுக்கண்ணு, செந்தில், சொக்க்லிங்கம், ஆதித்தன், மத்தியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.யோகா செல்வராஜ் நன்றி கூறினார்.அடுத்த அமர்வாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும் போது:-கம்பர் 12ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். அவரின் ஒரு புறத்தை மட்டுமே பார்க்கின்றனர். அவற்றை கடந்து வர அவர் அடைந்த துன்பத்தை பேசவே நாங்கள் வந்துள்ளோம். இலக்கிய விழாவில் நாங்களா என யோசிக்கலாம். அரசியல் வேறு இலக்கியம் வேறு. கம்பர் எப்படிஅரசு இருக்க வேண்டும், அரசர் எப்படி இருக்க வேண்டும், தனிமனிதர் ஒழுக்கம் எப்படி இருக்க வேண்டும் பல வகைகளில் தெரிவித்துள்ளார். கம்பர் பற்றி பேச இன்று குறிப்பு எடுத்துக் கொண்டு வந்து பேசுகிறேன்.

    உலகம் உருண்டை என 15ம் நூற்றாண்டில் கூறினார்கள். ஆனால் 2500 ஆண்டுகள் முன்னரே உலகம் உருண்டை வடிவில் என தமிழ் அறிஞர்கள் கூறியுள்ளனர். விமானம், ஹெலிகாப்டர் என்ற நவீன கருவிகள் பிற்காலத்தில் வந்ததை. இவையெல்லாம் வேறு பெயர்களில் முன்னரே தமிழ் இலக்கியங்களில் வந்து விட்டது என்று தெரிவித்தார்.விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சை கம்பன் கழக தலைவர் எஸ்.எஸ்.ராஜ்குமார், மூத்த வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், ஒலி, ஒளி அமைப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆ.செந்தில்குமார் அறங்காவலர் நியமன குழு தலைவர் தவ.பாஞ்சாலன், தமிழ் சங்கம் தலைவர் அரு.வீரமணி, நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, கட்டுனர் சங்கம் முன்னாள் மாநில தலைவர் ராய.முத்துக்குமார், ஒப்பந்தகாரர் சத்தியசீலன், நகர்மன்ற உறுப்பினர் சுப.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முரளிதரன் நன்றியுரை ஆற்றினார்.

    Next Story
    ×