என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1008 திருவிளக்கு பூஜை
    X

    1008 திருவிளக்கு பூஜை

    • பொன்னமராவதி உடையாபிராட்டி அம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது
    • விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பொன்-புதுப்பட்டி உடையாபிராட்டி அம்மன் கோயிலில் ஆடி மாத திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். அதேபோன்று இவ்வாண்டு பாலாஜி குருக்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சந்தன காப்பு சேர்த்தப்பட்டது. பின்னர் 1008 பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி மலர்களினாலும், குங்குமதினாலும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இவ்வாறு 1008 திருவிழாக்கு ஏற்றி வழிபாடு செய்வதன் மூலமாக மனித வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பதனை ஐதிகமாக கொண்டு இக்கோயிலில் பல வருடங்களாக இந்த திருவிளக்கு பூஜை வழிபாடு என்பது இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொன்னமராவதி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் தீயணைப்பு படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    Next Story
    ×