என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு  நாமக்கல் மாவட்டத்தில் 14.31 லட்சம் வாக்காளர்கள்
    X

    வரைவு வாக்காளர் பட்டியலை நாமக்கல் கலெக்டர் வெளியிட்ட காட்சி.

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு நாமக்கல் மாவட்டத்தில் 14.31 லட்சம் வாக்காளர்கள்

    • வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.
    • அதன்படி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 30 ஆயிரத்து 953 பேர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 30 ஆயிரத்து 953 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 94 ஆயிரத்து 631 பேர். பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 36 ஆயிரத்து 137 பேர். மற்றவர்கள் 135 பேர் அடங்குவர்.

    தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு,

    ராசிபுரம் தனி தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 862 பேரும், சேர்ந்தமங்கலம் தனி தொகுதியில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 54 பேரும், நாமக்கல் தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 705 பேரும், பரமத்தி வேலூர் தோகுதியில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 729 பேரும், திருச்செங்கோடு தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 487 பேரும், குமாரபாளையம் தொகுதியில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 116 பேரும் உள்ளனர்.

    கடந்த 5-1-2022 முதல் 6591 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். 27 ஆயிரத்து 868 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 14 லட்சத்து 52 ஆயிரத்து 230 வாக்காளர்கள் இருந்த நிலையில், இன்றைய தேதி படி வாக்காளர்கள் 14 லட்சத்து 30 ஆயிரத்து 953 ஆக உள்ளனர். இதனால் வாக்காளர் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.

    மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 5-1-2022 முதல் 31-10-2022 வரை பொதுமக்களிடம் பெறப்பட்ட படிவங்களை விசாரணை செய்து வரைவு வாக்காளர் பட்டியல் ஆனது இன்று வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சி யர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம்.

    வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர் களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் அஞ்சல் மூலமாக வழங்கப்படும்.

    இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக இன்று முதல் 8-12-2022 வரை சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற உள்ளது. பணியின் போது 1-1-2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளாதவர்கள் திருத்தங்கள் செய்ய விரும்புபவர்களும் உரிய விண்ணப்பங்களை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அளிக்கலாம்.

    மேலும் வருகிற 12, 13-ஆம் தேதி மற்றும் 26, 27-ந் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள 686 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்த நாட்களிலும் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பிசிங் தெரிவித்தார்.

    Next Story
    ×