search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பெண் மருத்துவர் நிரந்தரமாக நியமிக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
    X

    சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பெண் மருத்துவர் நிரந்தரமாக நியமிக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

    • மருத்துவமனைக்கு தாலுகாவை சேர்ந்த சுமார் 400 பேர் தினசரி வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
    • சாத்தான்குளம் அரசு மருத்துவமனை புறக்கணிக்கப்பட்ட மருத்துவமனையாக உள்ளது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியத்தில் 24 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. தாலுகா தலைநகரமான சாத்தான்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மகப்பேறு பெண் மருத்துவர் இன்னும் நியமிக்கப்படவில்லை. பெண் மருத்துவர் நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என அரசுக்கு அரசியல் கட்சியினரும் தாலுகா பகுதி பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட ம.தி.மு.க. கலைப் பிரிவு செயலாளரும் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான மகாராசன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பி உள்ளனர்.

    அம்மனுவில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையானது 27 கிராமங்களை உள்ளடக்கியதாகும். இந்த மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகள் உள்ளன. மருத்துவமனைக்கு தாலுகாவை சேர்ந்த சுமார் 400 பேர் தினசரி வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் இங்கு 2 ஆண்கள் மருத்துவர்களே உள்ளனர். மகப்பேறு மருத்துவமனையில் ஒரு மாத காலமாக பெண் டாக்டர் இல்லை. இதனால் கருவுற்ற பெண்கள் சிரமப்படுகின்றனர். மருத்துவமனையில் பிரசவம் நடைபெறவில்லை. சாத்தான்குளம் அரசு மருத்துவ மனை புறக்கணிக்கப்பட்ட மருத்துவமனையாக உள்ளது. எனவே தாலுகா அளவில் உள்ள இந்த மருத்துவ மனையில் கர்ப்பிணி பெண்கள் பயன் பெறும் அளவில் உடனடியாக பெண் மருத்துவர் நியமிக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×