search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை படத்தில் காணலாம்


    ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை

    • அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்
    • போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினர்.

    குள்ளனம்பட்டி :

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், குட்டத்துப்பட்டி அருகில் உள்ள புளியராஜக்காபட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, கழிவு நீர் போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என இப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

    நாளை இப்பகுதியில் காளியம்மன் கோவில் திருவிழா தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக சாக்கடை கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி தருவதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இன்று வரை எந்தவித பணிகளும் நடக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து ஊராட்சி தலைவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் வெளியூரில் வசிப்பதாக கூறி உள்ளார். இருந்தபோதும் பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்துக்கு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வெளியூரில் இருப்பதாக கூறிய ஊராட்சி தலைவர் அங்கு வந்ததால் பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பான சூழல் உருவானது. போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து போராட்டத்தை கைவி–டுமாறு அறிவுறுத்தினர்.

    Next Story
    ×