என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- திண்டுக்கல் மாவட்ட ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஒன்றிய அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மருத்துவகாப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களையவேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கவேண்டும்.
3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்கவேண்டும். குடும்ப நலநிதியை வழங்கவேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அமல்ராஜ், ஜெயசீலன், நிர்வாகிகள் ஜேம்ஸ்கஸ்பார்ராஜ், ராஜாராம், கேசவன், பிரபாகரன், பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






