என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிலங்களை முறையாக வரையறை செய்து உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டும் -11 சங்க நிர்வாகிகள், கலெக்டரிடம் மனு
- கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
- ஓசூருக்கு ஒரு தனி அதிகாரி நியமிக்க வேண்டும்
கிருஷ்ணகிரி,
ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம் (ஹோஸ்டியா), ஹோசியா, சிவில் என்ஜினீயர் சங்கம், வணிகர் சங்கம், கட்டிட தொழிலாளர்கள், கட்டிட பொறியாளர்கள் சங்கம் உள்பட 11 சங்கங்களை சேர்ந்த, 30&க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
பிறகு அவர்கள் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகராட்சி. ஓசூர் புறநகர் வளர் ச்சிக்கு புதிதாக ஏற்படுத்தப்பட்ட 'ஓசூர் அர்பன் டெவலப்மென்ட் அத்தாரிட்டி' என்ற புதிய அமைப்பிற்கு நிர்வாக அதிகாரி, செயல் அலுவலர்கள், பணி யாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
ஒரு நிலத்திற்கான அப்ரூவலுக்காக பல மாத காலங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. கடந்த, 34 வருடமாக நிலங்கள் முறையாக வரையறுக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் நில அங்கீகாரம் பெற சென்னை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் தொடங்க வருபவர்கள் கூட அப்ரூவல் தாமதத்தால் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனர். நிலங்களில் கடன் வாங்கி முதலீடு செய்தவர்கள், அதை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். தேங்கியுள்ள நிலங்களை வரையறை செய்து உடனடி அப்ரூவ் வழங்காததால் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
எனவே ஓசூரில் மாஸ்டர் பிளான் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், அப்ரூவல் பெறுவதற்கான ஆன்லைன் வழிமுறைகள் குறித்து கட்டிட பொறியாளர்களுக்கு பயிற்சி தர வேண்டும், மாவட்ட டி.டி.சி.பி., அலுவலகத்தில் உள்ள துணை இயக்குனர் மூன்று மாவட்ட அலுவலக பொறுப்புகளை கவனித்து வருகிறார். அதனால் ஓசூருக்கு ஒரு தனி அதிகாரி நியமிக்க வேண்டும்,
முதலீடு செய்த நில உரிமையாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், பொறியாளர்கள், மற்றும் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து சங்கங்களையும் காப்பாற்ற கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






