search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் உள்பட 11 பேருக்கு பதவி உயர்வு
    X

    கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் உள்பட 11 பேருக்கு பதவி உயர்வு

    • தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையில் பல்வேறு நிலைகளில் துணைப்பதிவாளர்களாக பணிபுரிந்து வரும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக நேற்று பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
    • மொத்தம் 11 பேர் இணைப்பதிவாளர்களாக பதவி உயர்வு பெற்றதற்கான உத்தரவை கூட்டுறவுத்துறை அரசு முதன்மை செயலாளர் பிறப்பித்துள்ளார்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையில் பல்வேறு நிலைகளில் துணைப்பதிவாளர்களாக பணிபுரிந்து வரும் 11 பேருக்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக நேற்று பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளராக பணிபுரிந்து வந்த மீனா அருள், கள்ளக்குறிச்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக பதவி உயர்வு அளித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதேபோல், நெல்லை சரக துணைப்பதிவாளர் லட்சுமணக்குமார், தென்காசி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராகவும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி துணைப்பதிவாளர் முருகேசன், திருப்பத்தூர் மண்டல இணைப்பதிவாளராகவும், கோபிச்செட்டிபாளையம் துணைப்பதிவாளர் கந்தராஜா, கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    மொத்தம் 11 பேர் இணைப்பதிவாளர்களாக பதவி உயர்வு பெற்றதற்கான உத்தரவை கூட்டுறவுத்துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்து ள்ளார்.

    இதேபோல், கரூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்கள் உள்பட 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×