search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்வளத் துறை மூலம்  மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள்:   கலெக்டர் நேரில்  ஆய்வு
    X

    நீர்வளத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

    நீர்வளத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள்: கலெக்டர் நேரில் ஆய்வு

    • 2023-24 ஆம் ஆண்டிற்கு சீரிய திட்டமாக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் .
    • இப்பணிகளை மேற்கொள்வதால் 78 ஆயிரத்து 451 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    கடலூர்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் வேளாண் பெருமக்கள் மேன்மையடையவும், உரிய நேரத்தில் விவசாய பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வேளாண்மை உற்பத்தியினை பெருக்கிடும் நோக்கத்திலும், 2023-24 ஆம் ஆண்டிற்கு சீரிய திட்டமாக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியில் 55 பணிகள், ரூ.100 கோடி மதிப்பீட்டில் 768.30 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வார ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்வதால் 78 ஆயிரத்து 451 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    சிதம்பரம் அருகே பள்ளிப்படை கிராமத்திலிருந்து மீதிக்குடி வரையிலான பாசன நிலங்களுக்கு பாசனம் அளித்து வரும் மீதிக்குடி கிளை வாய்க்கால்களில் 1 முதல் 5 கிளை வாய்க்கால்கள் ரூ.20.30 லட்சம் மதிப்பீட்டில் 21.20 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும், தொடர்ந்து கனகரப்பட்டு, குமாரமங்கலம் மற்றும் கடவாச்சேரி கிராமங்களில் 1,100 ஏக்கர் விலை நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வரும் குமாரமங்கலம் வாய்க்கால், நரிமுடுக்கு வடிகால், சாலியந்தோப்பு வடிகால் மற்றும் உசுப்பூர் வடிகால்களை தூர்வாரி பலப்படுத்தும் பணிகள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வருவதையும், கவரப்பட்டு கிராம பகுதிகளில் 2,500 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வரும் கவரப்பட்டு வாய்க்கால் தொலைக்கல் 9 கிலோ மீட்டர் முதல் 18 கிலோ மீட்டர் வரையிலும் மற்றும் அதன் கிளை யு-டேம், டீ-டேம் இவைகளை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 9 கிலோ மீட்டர் தொலைவிற்கு தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×