search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில்  2 யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தம்
    X

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தம்

    • அனல் மின்நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக 1 மற்றும் 2-வது அலகுகள் இன்று இயங்கவில்லை.
    • மற்ற 3 அலகுகள் இயங்கி வருவதால் 630 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அனல் மின்நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக 1 மற்றும் 2-வது அலகுகள் இன்று இயங்கவில்லை. இதனால் அதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 420 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    எனினும் மற்ற 3 அலகுகள் இயங்கி வருவதால் 630 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அனல்மின் நிலைய அதிகாரி களிடம் கேட்டபோது காற்றாலை மூலம் தற்போது அதிகளவு மின்சாரம் கிடைத்து வருவதால் அனல்மின் நிலையத்தின் 2 அலகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×