search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களுக்கு முதலுதவி குறித்து செயல்முறை விளக்கம்
    X

    பொதுமக்களுக்கு முதலுதவி குறித்து செயல்முறை விளக்கம்

    • முதலுதவி பயிற்சி ஒவ்வொரு தனி நபருக்கும் அவசியமானது.
    • முதலுதவி பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    உலகெங்கிலும் உள்ள பலர் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பலர் உயிரை இழக்கிறார்கள்.

    ஆனால் ஒரு நபருக்கு முதலுதவி பற்றிய அறிவு இருந்தால் தொழில்முறை உதவிக்காக காத்திருக்கும் போது ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும். மேலும் பேரழிவுகள் மற்றும் தினசரி அவசர நிலைகளின் தாக்கத்தை பெருமளவில் குறைக்க உதவும்.

    அந்த வகையில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் 108 ஆம்புலன்ஸ் சார்பில் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு உள்ளரங்கில் 100 ஆப்தமித்ரா, ரெட்கிராஸ் தன்னார்வலர்கள் முதலுதவி செய்யும் முறையினை ஒத்திகையாக வெளிப்படுத்தினர்.

    அப்போது ஒருவரை மயக்க நிலையில் இருந்து காத்தல், எலும்பு முறிவு, காயங்களுக்கு கட்டு போடுதல், அடிபட்டவர்களை சுமந்து செல்லுதல் மற்றும் மிகவும் அத்தியாவசியமான கார்டியோ புல்மோனரி மறுமலர்ச்சி குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் பேசும்போது,

    முதலுதவி பயிற்சி ஒவ்வொரு தனி நபருக்கும் அவசியமானது.

    பேரிடர் காலங்களிலும், விபத்து காலங்களிலும் கோல்டன் ஹவர் என சொல்லப்படும் நேரத்தில் முறையான முதலுதவி செய்வதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.

    அத்தமித்ரா தன்னார்வலர்கள் அதற்கு முன்னோ டியாக திகழ்கிறார்கள்.

    மாவட்டத்திற்கு அவர்கள் பெரிதும் உதவிகரமாக திகழ்வார்கள்.

    ரெட்கிராஸ் அமைப்பின் மூலம் முதலுதவி பயிற்சி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.

    இந்நிகழ்வில் யூத் ரெட்கிராஸ் ஆலோசகர் ஜெயக்குமார், ஜூனியர் ரெட்கிராஸ் ஆலோசகர் பிரகதீஷ், ரெட்கிராஸ் பயிற்றுனர் சுரேஷ் குமார், தாசில்தார் சக்திவேல், 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ரெட்கிராஸ் துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார், பொருளாளர் சேக்நாசர் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×