என் மலர்
உள்ளூர் செய்திகள்

கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. பரிசு கேடயம் வழங்கிய காட்சி.
முதல்-அமைச்சர் பிறந்த நாளையொட்டி கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
- போட்டிக்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகள் போட்டிகளில் பங்கேற்றன.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கான கபடி போட்டி நடந்தது.
வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் புனிதா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, பூசை பாண்டியன், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.
போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகள் பங்கேற்றன. இதில் ஆலங்குளம் காளத்திமடம் அணி 3-வது இடமும், சேரன்மாதேவி ஏ.வி.எஸ். கபடி குழு 2-வது இடமும், குற்றாலம் பராசக்தி கல்லூரி அணி முதலிடமும் பெற்றது.
இதில் முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.15ஆயிரம், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூபாய் 10ஆயிரமும், 3 மற்றும் 4-ம் இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, இளைஞர் அணி சரவணன், மாவட்ட உடற்கல்வி இயக்குனர் நாராயணன், தி.மு.க. நகர துணை செயலாளர்கள் கே.எஸ். எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், வக்கீல் சதீஷ் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் சங்கர், வார்டு செயலாளர்கள் வீரமணி, வீரா, சிவா, கோமதிநாயகம்,காளிசாமி மற்றும் பிரகாஷ் ஜெயக் குமார், கேபிள்கணேசன், முருகன், வைரவேல், குமார், கோமதிசங்கர், பிர பாகரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.