search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனியில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்
    X

    மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தேனியில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்

    • தேனியில் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.
    • ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் சார்பில் இளைஞர்களிடம் உடற்பயிற்சியை பேணுவது குறித்தும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.

    17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு அரண்ம னைபுதூர் ஊராட்சிமன்ற அலுவலகத்திலிருந்து தொடங்கி கொடுவிலா ர்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் வரை 8 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில் 70 நபர்கள் கலந்து கொண்டனர்.

    25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டி யில் அரண்மனைபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தி லிருந்து கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் விலக்கு, ரயில்வே கிராசிங் வழியாக புதிய பஸ் நிலையம் வரை 10 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில் 30 நபர்கள் கலந்து கொண்டனர்.

    17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் 125 நபர்களும் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் 25 நபர்களுக்கான போட்டி அரண்மனைபுதூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இருந்து கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது.

    ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    இதில் உதவி காவல் கண்காணிப்பாளர் மதுகுமாரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×