search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறந்த முறையில் வளர்க்கப்பட்ட கிடாரி கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கல்
    X

    கிடாரி கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் வழங்கினார்.

    சிறந்த முறையில் வளர்க்கப்பட்ட கிடாரி கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கல்

    • 123 கால்நடைகளுக்கு சினை பரிசோதனை முதலான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • கூட்டுறவு சங்க 3 உறுப்பினர்களுக்கு தலா ரூ. 80 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் நாகரசம்பேட்டையில் கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்லிட் தஞ்சாவூர் (பால்வளத்துறை) மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் கருணாநிதி 100-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பால் உற்பத்தி கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கிடாரி கன்றுகளுக்கான பேரணி நடத்தப்பட்டு அவற்றில் சிறந்த 3 கிடாரி கன்றின் உரிமையாளர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்து, அதிக பால் உற்பத்தி செய்யும் 3 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இம்முகாமில் 260 கால்நடைகளுக்கான சிகிச்சை, 836 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், 32 கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல், 123 கால்நடைகளுக்கு சினை பரிசோதனை முதலான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து கால்நடைகளின் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான மேலாண்மை முறைகளை விளக்கும் விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தை சார்ந்த பேராசிரியர் ஜெகதீசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    மேலும் 7 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து 108 கறவை மாட்டுக் கடனுக்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு 76 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தொடக்கமாக கும்பகோணம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க 3 உறுப்பினர்களுக்கு தலா ரூ. 80,000 கடனுதவி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சுப்பையன், ஆவின் பொது மேலாளர் ராஜசேகர் கரிஷெட்டி, வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, துணை பதிவாளர் விஜயலட்சுமி, திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், கூகூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×