என் மலர்
உள்ளூர் செய்திகள்

நல்லம்பள்ளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும்- விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தல்
- அனைவருக்கும் இலவசமாக சுகாதார வசதி, மருத்துவ வசதி தர வேண்டும்.
- விவசாய தொழிலாளர்களின் தின சம்பளத்தை மாதம் 18 ஆயிரம் வரும் வகையில் உயர்த்த வேண்டும்.
நல்லம்பள்ளி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் முருகேசன், நிர்வாகக்குழு ராஜகோபால், ஒன்றிய பொருளாளர் மல்லையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாய தொழிலாளர் அனைவருக்கும் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் 400 சதுர அடியில் வீடு கட்டித்தர வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு விவசாய நிலம், வீட்டுமனை நிலம் வழங்க வேண்டும். தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும். அனைவருக்கும் இலவசமாக சுகாதார வசதி, மருத்துவ வசதி தர வேண்டும். விவசாய தொழிலாளர்களின் தின சம்பளத்தை மாதம் 18 ஆயிரம் வரும் வகையில் உயர்த்த வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரதாபன், தலைவர் மாதையன், துணை தலைவர் ராஜகோபால், துணை செயலாளர் பச்சாகவுண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.