என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை அருகே  சாலையில் பள்ளம் -  நிரந்தர தீர்வு காண கோரிக்கை
    X

    சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.

    செங்கோட்டை அருகே சாலையில் பள்ளம் - நிரந்தர தீர்வு காண கோரிக்கை

    • இலஞ்சி நான்கு முக்கு சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
    • சாலையில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகில் உள்ள இலஞ்சி மிக முக்கியமான சாலையாகும். இலஞ்சி நான்கு முக்கு சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குற்றாலம் வரும் பயணிகள் இந்த சாலையையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பிரதான சாலையில் மிக முக்கியமான பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவ்வழியாக சாலையில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. பள்ளத்தில் மண்ணை கொட்டி பராமரிப்பு வேலைகளில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அதற்கு ஒரு நிரந்தர தீர்வு இல்லாமல் தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இரவு நேரத்தில் அந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே உடனடியாக அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×