என் மலர்
உள்ளூர் செய்திகள்
சின்னம்பேடு ஊராட்சியில் பொங்கல் விழா: வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி
- பொங்கல் விழாவை முன்னிட்டு கபடி, கிரிக்கெட், செஸ், டென்னிஸ், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு ஊராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு கபடி, கிரிக்கெட், செஸ், டென்னிஸ், கயிறு இழுத்தல், லெமன் ஸ்பூன், உறியடித்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினர்களாக பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.








