search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளத்தை காணவில்லை என்ற போஸ்டர் எதிரொலி- அதிரடியாக நடவடிக்கை எடுத்து குளத்தை மீட்ட அதிகாரிகள்
    X

    சமூக ஆர்வலர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர் மற்றும் குளத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்.

    "குளத்தை காணவில்லை" என்ற போஸ்டர் எதிரொலி- அதிரடியாக நடவடிக்கை எடுத்து குளத்தை மீட்ட அதிகாரிகள்

    • அதிகாரிகள் குளத்தை அளந்து அது ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் கட்டாயம் மீட்டு தருவதாக சமூக ஆர்வலர்களிடம் உறுதி அளித்திருந்தனர்.
    • ஆக்கிரமிப்பாளர்கள் குளத்தின் முழு பகுதியையும் சுத்தம் செய்ய கூடாது என தடுத்ததால் அவர்கள் வசம் இருந்த ஆக்கிரமிப்பு நிலம் கண்டறியப்பட்டுள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் கடந்த வாரம் நீர்நிலை மீட்ப்பாளர்கள் குழுவினர் சார்பில் குளத்தை காணவில்லை என்ற போஸ்டர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் முன்னிலையில் அதிகாரிகள் அளவை செய்து குளம் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டது.

    பட்டுக்கோட்டை நகராட்சியில் பகுதியில் உள்ள அய்யனார் கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான பக்கிரிச்சி குளம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி சிறிய குட்டை போல் காணப்பட்டது.

    இந்த நிலையில் குளத்தை காணவில்லை என்று பட்டுக்கோட்டை நகர் பகுதி முழுவதும் சில தினங்களுக்கு முன்பு சமூக ஆர்வலர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் குளத்தை அளந்து அது ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் கட்டாயம் மீட்டு தருவதாக சமூக ஆர்வலர்களிடம் உறுதி அளித்திருந்தனர்.

    இந்த நிலையில் பட்டுக்கோ ட்டைவட்டா ட்சியர் ராமச்ச ந்திரன் தலைமையில் பட்டு க்கோட்டை நகராட்சி ஆணையர் குமார், நகரமை ப்பு அலுவலர் கருப்பையன் மற்றும் வருவாய்த்துறை, அறநிலையத்துறை, நகராட்சி உள்ளிட்ட அதிகாரிகள் அய்யனார் கோயில் மற்றும் அதற்கு சொந்தமான பக்கிரிச்சி குளத்தினை நில அளவை மேற்கொண்டதில், குளம் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் எல்லைப் பகுதிகளில் எல்லைக் கற்கள் நடப்ப ட்டன.

    பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் இந்த குளத்தில் மண்டிக்கிடந்த ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தி கழிவு நீரை வெளியேற்றி குளத்தைச் சுற்றி நடைபாதை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்காக டெண்டர் விடப்பட்ட பணியை மேற்கொண்ட பொழுது ஆக்கிரமிப்பாளர்கள் குளத்தின் முழு பகுதியையும் சுத்தம் செய்ய கூடாது என தடுத்ததால் அவர்கள் வசம் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தச் சம்பவம் நகரில் ஆக்கிரமிப்பில் உள்ள மேலும் பல குளங்களை சர்வே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறினர்.

    Next Story
    ×