search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூரில் தாமதமாக தேர்வு மையத்திற்கு வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு கண்ணீர்விட்டு கதறிய பெண்கள்
    X

    தாமதமாக வந்தவர்களை திருப்பி அனுப்பிய போலீசார்.

    கூடலூரில் தாமதமாக தேர்வு மையத்திற்கு வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு கண்ணீர்விட்டு கதறிய பெண்கள்

    • தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் இன்று நடைபெற்றது.
    • 9 மணிக்குமேல் வந்தவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    கூடலூர்:

    தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் இன்று நடைபெற்றது. இதற்காக தேனி மாவட்டத்தில் பல்வேறு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு காலை 9.30 மணிக்கு ெதாடங்கும் என்றும், 12.30 மணிவரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    தேர்வு எழுத வருபவர்கள் காலை 9 மணிக்கே அந்தந்த மையங்களுக்கு சென்றுவிடவேண்டும் எனவும், தாமதமாக வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    கூடலுரில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு இன்று 9 மணிக்கு மேலாக 15-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அதில் பலர் கைக்குழந்தைகளுடன் பெண்களும் வந்தனர். ஆனால் அவர்களுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. 9 மணிக்குமேல் வருபவர்களை உள்ளே அனுமதிக்ககூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே திரும்பிச்செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனால் ஒருசிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். தேர்வுக்காக கடந்த 6 மாதம் கடுமையாக படித்து தயார்படுத்தி இருந்த நிலையில் தேர்வுஎழுத முடியவில்லையே என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனால் அந்த தேர்வு மையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×