என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
திண்டுக்கல் அருகே காப்பர் கம்பி அனுப்புவதாக கூறி ரூ.2.55 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
- காப்பர் கம்பி அனுப்புவதாக கூறி ரூ.2.55 லட்சம் மோசடி செய்ததாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனியார் நிறுவன அதிகாரி யாக உள்ளார். தனது தொழில் தேவைக்காக காப்பர் கம்பிகள் விற்கும் இடம் குறித்து இணைய தளத்தில் தேடினார். அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த ஒரு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டார்.
தனக்கு 5 டன் காப்பர் கம்பி தேவைப்படுவதாக கணேஷ் தெரிவித்தார். இதற்கு ரூ.8.50 லட்சம் ஆகும் என்றும், முன்தொகையாக ரூ.2.55 லட்சம் செலுத்த வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். அதன்படி திரிபுராவைச் சேர்ந்த கோஷாமோகன் என்பவரது வங்கிக் கணக்கிற்கு கடந்த 11-ம் தேதி ரூ.2.55 லட்சம் அனுப்பினார்.
அதன் பிறகு தனக்கு காப்பர் கம்பி வராதது குறித்து கேட்டபோது உங்களது சரக்கு ஈரானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது உங்கள் ஊருக்கு வரவேண்டும் என்றால் மேலும் ரூ.4.40 லட்சம் கட்டவேண்டும். மொத்தம் 15 டன் காப்பர் கம்பி அதில் உள்ளது. உங்களுக்கு தேவையானதை எடுத்து க்கொண்டு மீதி கம்பிகளை விற்ற பிறகு பணம் கொடுத்தால் போதும் என்று தெரிவித்துள்ளனர்.
2வதாக பெங்களூரை சேர்ந்த சாமுவேல் என்ப வருக்கு பணம் அனுப்பி வைக்குமாறு எதிர்முனை யில் பேசியவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கணேஷ் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






