என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விமான நிலையம்-வந்தே பாரத் ரெயில்- மோடி தொடங்கி வைக்கும் திட்டங்களால் கிடைக்கும் நன்மைகள்
    X

    விமான நிலையம்-வந்தே பாரத் ரெயில்- மோடி தொடங்கி வைக்கும் திட்டங்களால் கிடைக்கும் நன்மைகள்

    • சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் வசதிகள் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது.
    • 'வந்தே பாரத்' ரெயில் சென்னைக்கும் கோவைக்கும் இடையே இயக்கப்படுகிறது.

    சென்னை:

    பிரதமர் மோடி இன்று பிற்பகலில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட்டுள்ள வசதிகளை தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து சென்னையில் இருந்து கோவைக்கு 'வந்தே பாரத்' அதிநவீன அதி விரைவு ரெயிலை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டங்களால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது பற்றி அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் வசதிகள் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் இமிகிரேஷன் சோதனைக்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்து நிற்கும் சூழல் இருக்கும்.

    இனி முற்றிலுமாக அது தவிர்க்கப்படும். புதிதாக 108 கவுண்டர்கள் திறக்கப்படுகிறது. ஒரு விநாடிக்கு 5 பயணிகளுக்கு இமிகிரேஷன் சோதனை செய்ய முடியும். இதனால் பயணிகள் காத்திருக்கும் நிலைமை தவிர்க்கப்படும். அதேபோல் சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் அனைத்து நவீன வசதிகளும் இந்த விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

    'வந்தே பாரத்' ரெயில் சென்னைக்கும் கோவைக்கும் இடையே இயக்கப்படுகிறது. ஏற்கனவே, சென்னையில் இருந்து மைசூருக்கு ஒரு ரெயில் இயங்கி வருகிறது. முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு உள்ளேயே இந்த ரெயில் இயக்கப்படுகிறது. மேற்கு தமிழகத்தையும், வடக்கு தமிழகத்தையும் இணைக்கும் இந்த ரெயில் மிகப்பெரிய தொழில் நகரமான கோவையையும் சென்னையையும் இணைக்கிறது. பயண நேரம் 5 மணி 50 நிமிடங்கள். இது தொழில் ரீதியான போக்குவரத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மிக எளிதில் கோவையில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து கோவைக்கும் வந்து செல்ல முடியும். இது தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் கை கொடுக்கும். தொழில் வளர்ச்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×