search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாலி ரோடு சந்திப்பில் மேம்பாலம் கட்ட திட்டம்
    X

    லாலி ரோடு சந்திப்பில் மேம்பாலம் கட்ட திட்டம்

    • போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை
    • 2019-ம் ஆண்டு மண் பரிசோதனை செய்தது.

    கோவை

    கோவை தடாகம் ரோட்டில், லாலி ரோடு சந்திப்பில் பாலம் கட்டுவதற்கு, மூன்று விதமாக 'டிசைன்' செய்து, சாலை பாதுகாப்பு குழு ஒப்புதலுக்கு மாநில நெடுஞ்சா லைத்துறை பரிந்துரைத்ததுள்ளது.

    மருதமலை ரோடு, தடாகம் பார்க் ரோடு, கவுலிபிரவுன் ரோடுகளை லாலி ரோடு சந்திப்பு ஒருங்கிணைக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில், இந்த நான்கு ரோடுகளில் இருந்து வரும் வாகனங்கள், சிக்னலில் ஸ்தம்பிக்கின்றன.

    'கிரீன்' சிக்னல் விழுந்து கடந்து செல்வதற்குள், மீண்டும் 'ரெட்' சிக்னல் விழுந்து விடுகிறது.

    அந்த ளவுக்கு நெடுந்தூரத்துக்கு கூட்டத்தின் வாகனங்கள், வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்ப ட்டுள்ளது.

    இதற்கு தீர்வு காண, லாலி ரோடு சந்திப்பில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு, 2019-ம் ஆண்டு மண் பரிசோதனை செய்தது. நான்கு வழித் தடங்களிலும் தினமும் பயணிக்கும் வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டன.

    இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள டிசைன், கோவை அலுவல கத்தில் நேற்று நடந்த சாலை பாதுகாப்பு குழு ஒப்புதலுக்காக, மாநில நெடுஞ்சாலைத்துறையால் சமர்ப்பிக்கப்பட்டது.

    வேளாண் பல்கலை மற்றும் வனத் துறைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தி, நான்கு சாலைகளில் இருந்து வரும், வாகன ஓட்டிகளும் கடக்கும் வகை பாலம் கட்டுவது தொடர்பாக அதிகாரிகள் விளக்கினர்.

    இதுெதாடர்பாக, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, வேளாண் துறை, வனத்துறை, காவல்துறை, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து, கூட்டம் நடத்தி, ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என கலெக்டர் கூறி உள்ளார்.

    விரைவில், அதற்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×