என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் பறிப்பு:  சி.சி.டி.வி. காமிராவில் பதிவான கொள்ளையர்களின் உருவம் - போலீசார் தீவிர விசாரணை
    X

    பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் பறிப்பு: சி.சி.டி.வி. காமிராவில் பதிவான கொள்ளையர்களின் உருவம் - போலீசார் தீவிர விசாரணை

    • மகாராஜன் கல்லாமொழி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
    • கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 67). இவர் கல்லாமொழி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.

    பட்டப்பகலில் கொள்ளை

    நேற்று முன்தினம் காலை திருச்செந்தூரில் இருந்து 2 வாலிபர்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக பங்கிற்கு வந்தனர். அப்போது மகாராஜனிடம் ரூ. 200-க்கு பெட்ரோல் நிரப்ப கூறியுள்ளனர். அப்போது அவர்கள் திடீரென அவரது பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். அதில் ரூ. 22 ஆயிரத்து 470 இருந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த மகாராஜன் இது தொடர்பாக குலசேக ரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். பட்டப்பக லில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தனிப்படை தீவிரம்

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெட்ரோல் பங்க் பகுதியில் பொருத்தப் பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில், மகாராஜனை தாக்கிய 2 வாலிபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதனை சேகரித்த போலீசார் கொள்ளையர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்ற னர்.

    Next Story
    ×