என் மலர்
உள்ளூர் செய்திகள்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
- மாதேஸ்வரா நகருக்கும் இத்திட்டத்தின்பயன் கிடைக்காமல் செய்துவிட்டார்.
- வீட்டுவரி எங்களிடம் வாங்கவும் ஆவணம் செய்துகொடுக்க கேட்டு கொள்கிறோம்.
திருப்பூர் :
திருப்பூர் பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதேஸ்வரா நகர் கிராம மக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2013-2014ல் அரசு நிலம் விலைக்கு வாங்கி, இடம் இல்லாத எங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கியுள்ளது.
நாங்கள் இந்து அருந்ததியினத்தை சார்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எங்களில் சிலர் சொந்த செலவில் வீடுகட்டியும், சிலர் குடிசையிலும் வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கு 2019ல்நடந்த பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு வாக்களிக்கவில்லை என கருதிபஞ்சாயத்து தலைவர் இதுவரைவீட்டுவரி, வீட்டு எண், குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படைவசதிகளை செய்து கொடுக்க மறுத்துவருகின்றார். வீட்டுவரி கட்ட சென்றால்வாங்க மறுக்கின்றனர். குடிநீர் வசதி செய்து தரவில்லை.
மேலும் இந்த ஆண்டிற்கான பாரத பிரதமரின் கனவு திட்டமான ஜல் ஜீவன்திட்டத்தில் அலகுமலை பஞ்சாயத்தில் அலகுமலை சிற்றூர் (குக்கிராமம்)சேர்க்க பெற்றிருந்தும் எங்களுக்கும், மாதேஸ்வரா நகருக்கும் இத்திட்டத்தின்பயன் கிடைக்காமல் செய்துவிட்டார்.
இந்த ஆண்டிற்கான அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடிசை வீட்டில்வசிக்கும் எங்களுக்கு வீடு ஒதுக்க வேண்டியபோது, நீங்கள் எவனிடம்சென்று சொன்னாலும் உங்களுக்கு வீடு கொடுக்க முடியாது என கடுமையாக திட்டுகின்றார். ஆகவே தாங்கள் தயவு செய்து அரசின் மூலம் நிலம் வாங்கப்பெற்றுபட்டா வழங்கியுள்ள எங்களுக்கு வீடு கிடைக்கவும், ஜல் ஜீவன் திட்டம் மூலம்குடி தண்ணீர் கிடைப்பதற்கும், வீட்டுவரி எங்களிடம் வாங்கவும் ஆவணம் செய்துகொடுக்க கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.








