search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே புற்றுக்கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
    X

    புகார்மனு அளித்த இந்துமுன்னணியினர்.

    தேனி அருகே புற்றுக்கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

    • அல்லிநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் வீரப்ப அய்யனார் கோவில் அமைந்துள்ளது.
    • புற்றுக்கோவிலை இடித்து தரைமட்டமாக்கிய அல்லிநகரம் கிராம கமிட்டியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் மனு அளிக்கப்பட்டது.

    தேனி:

    இந்து முன்னணி தேனி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜ் ஆகியோர் ஆலோசனையின்படி தேனி நகர தலைவர் மணிகண்டன் தலைமையில் இந்து முன்னணியினர் தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர்.

    அந்த மனுவில், அல்லிநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் வீரப்ப அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலை அய்யனாராக பாவித்து பால்குடம், காவடி போன்ற நேர்த்திக்கடன் பக்கர்கள் செய்வது வழக்கம். அல்லிநகரத்தில் கிராம கமிட்டி என்ற பெயரில் சில பேர் மட்டும் இந்து கோவில்களின் ஆகமவிதிகளுக்கு மாறாக பொதுமக்களிடம் எந்த ஒரு கருத்துக்கள் கேட்காமலும் ஆகமவிதியை மீறி சில செயல் களை செயல்படுத்தி உள்ளனர். அதாவது அய்யனார் முன்பாக நந்தீஸ்வரரை வைத்தது அல்லிநகரம் வாழ் இந்து மக்களுக்கு உடன்பாடில்லை.

    இதை மையமாக வைத்து எந்தவித முறையான ரசீதும் இல்லாமல் பணம் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் கோவில் எதிர்புறம் இருந்த பெண்கள் வழிபடக்கூடிய புற்றுக் கோவிலை இடித்து விட்டு அந்த இடத்தில் சிமிண்ட் திட்டு கட்டியுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை கண்கட்டி, கண்டும் காணாததும் போல் உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

    எனவே புற்றுக்கோவிலை இடித்து தரைமட்டமாக்கிய அல்லிநகரம் கிராம கமிட்டியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    Next Story
    ×