search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஜயின் லியோ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்பு குழு
    X

    விஜயின் "லியோ" திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்பு குழு

    • பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் எச்சரிக்கை:விஜயின் “லியோ” திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளை கண்காணிக்க
    • குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    நடிகர் விஜய் நடித்த 'லியோ' தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 13-ந் தேதி அன்று சிலகட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது.

    அதன்படி வருகிற 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்புகாட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் 'லியோ' படத்தை திரையிடவும், காலை 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 1.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படம் காணவரும் பொதுக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது எனவும், கட்டுப்பாடுகள் விதித்து ள்ளது.

    மேலும் இந்த அரசு ஆணை தொடர்பாக கண்காணிக்க சிறப்புகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 19ம் முதல் 24ம் தேதி வரையில் 'லியோ' திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கு உரிமையா ளர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு வகுத்துள்ள கட்டுப்பா டுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், திரையரங்கிற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் சிறந்தமுறையில் அமைத்திட வேண்டும் எனவும், திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் நடத்தப்படும் நேர்வில் சுகாதார குறைபாடு கள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், திரையரங்கு களை சுகாதாரமாக பராமரிக்க போதுமானகால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறை களுடன் சிறப்புகாட்சி நடத்தப்பட வேண்டும் எனவும், மேலும் அரசு அனுமதி அளித்துள்ள காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்குள் திரைப்படத்தை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும், அதிககட்ட ணத்துக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், திரையரங்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு கண்காணிப்புகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பெரம்பலூர் வட்டாட்சியர் 9445000610, வேப்பந்தட்டை வட்டாட்சியர் 9445000611 மற்றும் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் 9445000458 என்ற எண்களில் புகார் தெரிவிக்க லாம். அரசு விதித்துள்ள மேற்கூறிய கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் திரையரங்குகள், அதன் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் திரையரங்கு களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்யப்படு கிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×