search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செட்டிகுளம் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்
    X

    செட்டிகுளம் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

    • செட்டிகுளம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது
    • முக்கிய வீதியின் வழியாக வீதி உலா நடை பெற்றது

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலைக்குன்றின் மீது பிரசித்தி பெற்ற தண்டாயுத பாணி சுவாமி கோயில் உள்ளது. மற்ற முருகன் கோயில்களில் முருகன் கையில் வேல் இருக்கும். ஆனால் இந்த கோயிலில் முருகன் கையில் வேலுக்கு பதிலாக செங்கரும்பு ஏந்தி நிற்பார். இதனால் இந்த முருகனுக்கு செங்கரும்பு ஏந்திய செந்தில் ஆண்டவர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா வையொட்டி ஷண்முகா ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து தண்டாயுதபாணி உற்சவர் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி, விபூதி, பழவகைகள் மற்றும் கலச தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உற்ச வர் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளோடு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்த னூர், இரூர், பாடாலூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், பொம்மனப்பாடி, சத்திர மனை, வேலூர், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மாவலிங்கை மற்றும் பெரம்பலூர் மாவட்ட மின்றி, வெளி மாவட்டங்க ளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர். பக்தர்களுக்கு பிரசாத மும், அன்னதா னமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் இருந்து சுவாமிகள் செட்டி குளம் கடைவீதியில் அமைந்துள்ள ஏகாம்ப ரேஷ்வரர் கோயி லுக்கு வந்தடைந்தது. அங்கி ருந்து சிறப்பு அலங்காரம் செய்த பிறகு வீதி உலா தொடங்கி முக்கிய வீதியின் வழியாக வீதி உலா நடை பெற்றது. முடிவில் சூரச ம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து செட்டி குளம் கடைவீதி அருகே உள்ள ஏகாம்பரேஷ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடை பெற்றது.

    Next Story
    ×