என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில்  பள்ளி நலக்கல்வி திட்டத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
    X

    பெரம்பலூரில் பள்ளி நலக்கல்வி திட்டத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

    • பெரம்பலூரில் பள்ளி நலக்கல்வி திட்டத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடந்தது
    • பயிற்சிக்கு கிராமாலயா முதன்மை செயல் அலுவலர் மற்றும் நிறுவனர் தாமோதரன் தலைமை வகித்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் பள்ளி நலக்கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க, நடுநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நடந்தது.திருச்சி கிராமாலயா சார்பில் பள்ளி நலக்கல்வி திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி பெரம்பலூரில் இரண்டு நாள் நடந்த பயிற்சிக்கு கிராமாலயா முதன்மை செயல் அலுவலர் மற்றும் நிறுவனர் தாமோதரன் தலைமை வகித்தார்.மாவட்ட கல்வி அலுவலர்கள் குழந்தைராஜன், அண்ணாதுரை, சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பயிற்சியை தொடங்கிவைத்து பேசினார்.

    மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் கலந்துகொண்டு பள்ளி சுகாதார நல கல்வி திட்டத்தின் கீழ் தன் சுத்தம், வகுப்பறை சுத்தம், வீட்டு சுத்தம், நோய்வாய்ப்பட்டு இருக்கும் இடத்தில் சுத்தம், சுற்றுபுற சுத்தம் ஆகிய 5 தலைப்பின் கீழ் விரிவாக பயிற்சி அளித்தார். மேலும் செயல்முறை விளக்க பயிற்சியும் அளிக்கப்பட்டது.இதில் உதவி தொடக்க அலுவலர் ரமேஷ், ஜெயசங்கர் மற்றும் பெரம்பலூர், ஆலத்தூர்,வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த தொடக்க, நடுநிலை ஆசிரியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி சுகாதார நல கல்வியாளர் ஆனந்தி வரவேற்றார். சுகாதார நல கல்வியாளர் மீராலட்சுமி நன்றி கூறினார்.


    Next Story
    ×