என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுதானிய உணவு திருவிழா
- பெரம்பலூரில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது
- சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான உணவுப்பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் சிறுதானிய உணவு திருவிழா ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் நடந்தது.விழாவிற்கு நேருயுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா தலைமை வகித்தார். ரோவர் வேளாண்மை கல்லூரி முதல்வர் (பொ) வஹாப் முன்னிலை வகித்தார். மைய தலைவரும், முதுநிலை விஞ்ஞானியுமான நேதாஜி மாரியப்பன் சிறுதானிய கண்காட்சியை திறந்துவைத்து பேசினார். மைய நிர்வாக அலுவலர் ஜெயசீலன், மைய தொழில் நுட்ப வல்லுனர் கோகிலவாணி உட்பட பலர் பேசினர்.நிகழ்ச்சியில் சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களும், சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான உணவுப்பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு, அதன் பயன்பாடு, அதனால் எற்படும் நன்மைகள் பற்றி விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.இதில் 100க்கு மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக நேருயுவகேந்திரா கணக்காளர் தமிழரசன் வரவேற்றார். முடிவில் தன்னார்வ தொண்டர் வீரமணி நன்றி கூறினார்.






