search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
    X

    இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

    • புதிய பஸ் நிலையம் அருகே நின்ற இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது
    • உரிமையாளர்கள் வரவழைத்த போலீசார் அபராதம் வசூலித்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் இருசக்கர வாகனங்களை, அதன் உரிமையாளர்கள் நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக புகார்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த வண்ணம் இருந்தன. அதனை தொடர்ந்து பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமையில், நகர போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் நேற்று புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து லாரியில் ஏற்றி நகர போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அதன் உரிமையாளர்களை வரவழைத்து போலீசார் அபராதம் வசூலித்து, இரு சக்கர வாகனங்களை கொடுத்து எச்சரித்து அனுப்பினர். பெரம்பலூர் நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், சாலை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி எச்சரித்தார்.

    Next Story
    ×