என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம்
  X

  ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.
  • கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

  பெரம்பலூர்

  பெரம்பலூரில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர், நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பஷீர், வட்ட கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் பொதுத்துறைகளை, பொதுத்துறைகளாகவே நீடிக்க செய்ய வேண்டும். 1.1.2022 முதல் அளிக்க வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக அளிக்க வேண்டும். அரசின் உத்தரவாதங்களுடன் தடையின்றி தொடர்ந்து ஓய்வூதியம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 1.4.2003-க்கு பிறகு நிரந்த வேலையில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அரைநிர்வாண போராட்டம் நடந்தது. இதில் ஆண்கள் சட்டை அணியாமலும், பெண்கள் கறுப்பு நிற முக கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட கிளை துணை செயலாளர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.

  Next Story
  ×