search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சேரியில் கிராமப்புற நூலகம் அமைக்க கோரிக்கை
    X

    செஞ்சேரியில் கிராமப்புற நூலகம் அமைக்க கோரிக்கை

    • செஞ்சேரியில் கிராமப்புற நூலகம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் கூட்டம் மாநில துணைத்தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை, கிளைகளை தொடங்குதல், இயக்க செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடமும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 2-வது இடமும் பெற்றமைக்கும், தேசிய திறனறி தேர்வில் பெரம்பலூர் மாவட்ட கல்வித்துறைக்கும், கல்வித்துறை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்தும், செஞ்சேரியில் கிராமப்புற நூலகம் அமைக்க வேண்டும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மீது 5 சதவீத விற்பனை மற்றும் சேவை வரிவிதிப்பை ரத்துசெய்ய வேண்டும். தாலுகா தலைநகரான ஆலத்தூரில் தனி நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெரம்பலூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த செஞ்சேரி முதல் திருச்சி-சென்னை நான்கு வழிச்சாலையை இணைக்கும் புறவழிச்சாலை விரிவாக்க திட்டப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்றும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை குறைக்க கோரியும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

    Next Story
    ×