என் மலர்
உள்ளூர் செய்திகள்

பராசக்தி அம்மன் ஆலயத்தில் மாங்கல்ய பூஜை
- புதுவேட்டக்குடி ஓம் பராசக்தி அம்மன் ஆலயத்தில் மாங்கல்ய பூஜை நடைபெற்றது
- மாங்கல்ய பூஜையில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள புதுவேட்டக்குடி கிராமத்தில் ஓம் சக்தி தெருவில் சொற்பமாய் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஓம் பராசக்தி ஆலயத்தில் ஆடி மாதத்தில் சுமங்கலி பூஜை நடைபெறுவது வழக்கம்.அதுபோல் நேற்று மாலை 7-மணியளவில் மாங்கல்ய பூஜை மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிறுவனத் தலைவர் சிவசாமி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.இந்த மாங்கல்ய பூஜையில் 700-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கு கொண்டு மாங்கல்ய பூஜை செய்தனர்.இக்கோவிலில் திருமணம் ஆகாதவருக்கு திருமண பாக்கியமும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் வேண்டி வருவோருக்கு நிறைவேற்றித் தருவதாக இக்கோவிலுக்கு வரும் பக்த கோடிகள் கூறுகிறார்கள்.
Next Story






