search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வக்கீல்கள் இன்று முதல் நீதிமன்ற புறக்கணிப்பு
    X

    வக்கீல்கள் இன்று முதல் நீதிமன்ற புறக்கணிப்பு

    • வக்கீல்கள் இன்று முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள்.
    • இ-பைலிங் நடைமுறைக்கு கால அவகாசம் வழங்கக்கோரி

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் அட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பின் அவசர பொதுக்குழுக்கூட்டம் அதன் தலைவர் மணிவண்ணன் தலைமையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. இதில் செயலாளர் சிவசங்கரன், பொருளாளர் மணிகண்டன் மற்றும் திரளான வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் விபத்து இழப்பீடு கோரும் மனு மற்றும் இந்து திருமணம் தொடர்பான மனு உள்பட அனைத்து மனுக்களும் ஆன்லைன் முறையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போதிய காலஅவகாசம் அளிக்காமலும், இந்த நடைமுறையில் உள்ள நிறை மற்றும் குறைகள் குறித்து வக்கீல்களிடம் கருத்து கேட்காமலும் நீதிமன்றத்தில் இதற்கான முழுமையாக அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காமலும், ஆன்லைன் மூலம் இ-பைலிங் முறையை அவசரமாக நடைமுறைக்கு கொண்டு வருவதால், வழக்கு நடத்துபவர்களும், வக்கீல்களும் கடுமையான பாதிக்கப்படுவார்கள். எனவே உரிய கால அவகாசம் வழங்கி இதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், இதற்கான முழுமையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் வரை முன்பு இருந்த நடைமுறையையே தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் வரை இன்று (வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்ற பணிகளில் இருந்தும் விலகி இருப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×