என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா
- மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது
- முன்னதாக கோவிலில் மாணவிகளுக்காக சிறப்பு வழிபாடு நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக பருவத்தேர்வு முடிந்து இளநிலை இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மற்றும் முதுநிலை இரண்டாமாண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி குழும செயலாளர் விவேகானந்தன், முதல்வர் சுபலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி குழும தாளாளர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து பேசுகையில்,இறைவன் இப்புவியில் பெண்களுக்கு இயற்கையிலே ஞானத்தை தந்துள்ளார். அஞ்ஞானத்தை நன்முறையில் பயன்படுத்திக் கல்வியால் முன்னேற வேண்டும். பெற்றோர்களின் கனவை நனவாக்க வேண்டும். இறையருளால் கல்விச் செல்வம் மட்டும் அல்லாது அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வில் மேம்பட வேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக கணபதி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.






