என் மலர்
உள்ளூர் செய்திகள்

மைக்கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
- மைக்கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தப்பட்டன.
- இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை
பெரம்பலூர்:
நாம் தமிழர் கட்சியின் செட்டிகுளம் கிளை சார்பில் கலெக்டரிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தை சுற்றியுள்ள குளங்களில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். குன்னம் தாலுகா, கோவில்பாளையத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் இன மக்கள் கொடுத்த மனுவில், கடந்த 2013-ம் ஆண்டு எங்கள் கிராமத்தில் ஆதிதிராவிடர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அனுமதிக்கப்பட்டதில், இன்னும் 109 பேருக்கு பட்டா வழங்கப்படவில்லை. துங்கபுரம் (தெற்கு) கிராம நிர்வாக அலுவலர் பட்டா வழங்க முறையான நடவடிக்கை எடுக்காததால், அவரை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும். விடுபட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம், என்று கூறியிருந்தனர்.






