என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை
- மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- விவசாய கூலி வேலை செய்து வந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிழுமத்தூர் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 42). மாற்றுத்திறனாளியான இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுசிலா(35) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சுசிலா வீட்டை விட்டு வேறு நபருடன் சென்றதால் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த செந்தில்குமார் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






