என் மலர்
உள்ளூர் செய்திகள்

காளிங்கராயநல்லூர் கிராமத்தில் தீமிதி திருவிழா
- காளிங்கராயநல்லூர் கிராம மன்னாதசுவாமி கோவில் தீமிதி திருவிழா
- தீமிதி விழாவை முன்னிட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள காளிங்கரா யநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பச்சைய ம்மன் சமேத மன்னாதசுவாமி திருக்கோயில் அமைந்து ள்ளது .
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம்.
அதுபோல இந்த ஆண்டும் கடந்த வெள்ளி க்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர் சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு தீபாரா தனை நடைபெற்றது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்தி கட ன்களை செலுத்தினார்கள்.
வேப்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் குன்னம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு இருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அசலா ம்பிகை, தக்கார் சுசீலா, தர்மகர்த்தாக்கள் ஆசை த்தம்பி, காசிநாதன், பழனிமுத்து, வெங்கடேசன், கருணாநிதி, தேவகி சீனிவா சன், அண்ணாதுரை, கோவி ந்தசாமி , வசிஷ்டபரம் ஊராட்சி மன்றத் தலைவர் கணிமொழி பன்னீ ர்செல்வம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.






