என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிலத்தரகர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்
- நிலத்தரகர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்ந டைபெற்றது
- புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது
ெபரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு பெரம்பலூரில் உள்ள ஜி கே மஹாலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அச்சங்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் வி. கண்ணன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணை செயலாளராக சிவகுமார், மாவட்ட தலைவராக செல்வம், மாவட்ட செயலாளராக முருகானந்தம், மாவட்ட பொருளாளராக ஆண்டாள் சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் புதியதாக 50 உறுப்பினர்கள் தங்களை சேர்த்துக் கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் சங்க பொன்விழா ஆண்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. முன்னதாக மாவட்ட பொறுப்பாளர் சுந்தர்ராஜ் அனைவரையும் வரவேற்றார். பொறுப்பாளர் பொன்னுசாமி முடிவில் நன்றி கூறினார்.






