என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து நகைகள் - பணம் திருட்டு
- வடக்குமாதவி கிராமத்தில் வீடு புகுந்து நகைகள், ரூ,85 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி(வயது 50). இவரது கணவர் இறந்துவிட்டார். இவர் வடக்குமாதவி-சோமண்டாபுதூர் சாலையில் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன்களில் ஒருவரான கோபால் வடக்குமாதவி சாலையில் உள்ள சமத்துவபுரத்தில் வசித்து வருகிறார். மற்றொரு மகன் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். முத்துலட்சுமி பெரம்பலூரில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் இவர் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் 2.30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவின் தகரம் பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த தாலிச்சங்கிலி, தாலிக்காசு, தங்கச்சங்கிலி உள்பட 3 பவுன் நகைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடனாக பெற்ற ரூ.85 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.இது குறித்து அவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும், துப்பறியும் மோப்பநாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நகைகள் மற்றும் பணத்தை திருடிசென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.






