என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரு தரப்பினர் மோதலில் 4 பேர் கைது
- இரு தரப்பினர் மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கோவில் நிலத்தில் விவசாயம் செய்வது தொடர்பாக
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள சிறுவயலூரில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் யார் விவசாயம் பார்ப்பது? என்பது தொடர்பாக சிறுவயலூரை சேர்ந்த ராஜேந்திரன் தரப்பிற்கும், சிவகுமார் தரப்பிற்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டை போன்றவற்றால் தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் ராஜேந்திரன் மற்றும் வீரமுத்து ஆகியோர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட சிறுவயலூரைச் சேர்ந்த சிவகுமார் (45), செல்லமுத்து (32), மாயவேல் (43), பாபு (30) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்."
Next Story






